நடிகை நேஹா ஷெட்டி சமீபத்தில் பவன் கல்யாண் நடிப்பில்.வெளியான “ஓஜி” படத்தில் கிளாமர் பாடலில் நடனமாடி ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

இப்போது, அவர் தமிழில் அறிமுகமாகியுள்ளார். அக்டோபர் 17-ஆம் தேதி வெளிவரும் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள “டியூட்” படத்தில் நேஹா ஷெட்டி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
“டியூட்” படம் வெற்றிபெறுமானால், அது நேஹாவுக்கு தமிழ்த் திரையுலகில் அதிக வாய்ப்புகளுக்கான கதவுகளை திறக்கக் கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேஹா தெலுங்கில் “டிஜே தில்லு” மூலம் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.