நடிகர் அஜித், தனது நடிப்பைத் தாண்டி கார் பந்தயத்தில் அதிக ஆர்வம் கொண்டவர். கடந்த ஒரு ஆண்டாகவே பல்வேறு சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். துபாய் பந்தயம் உள்ளிட்ட போட்டிகளில் அவர் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்துள்ளார். தற்போது ஜெர்மனியில் நடைபெறும் கார் பந்தயத்தில் பங்கேற்று வருகிறார். அங்கு அவரை சந்தித்த ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
அப்போது அவர்களிடம் பேசிய அஜித் கூறியதாவது: “என்னைப் பிரபலப்படுத்த வேண்டாம், கார் பந்தயத்தைப் பிரபலப்படுத்துங்கள். இங்கு பங்கேற்கும் இந்திய வீரர்களை முன்னிலைப்படுத்துங்கள். இங்கு உள்ள வீரர்கள் ஒவ்வொருவரும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகுந்த உழைப்பை மேற்கொள்கிறார்கள். ஆனால் அவர்களின் கஷ்டங்கள் பலருக்கு தெரியாது. ஒரு நாள் இந்திய வீரர்களும் நிச்சயம் பார்முலா ஒன் கார் பந்தயத்தில் சாம்பியனாக மிளிருவார்கள்” என்றார்.
அஜித்தின் இந்த பேச்சு தற்போது வைரலாகியுள்ளது. தன்னைவிட கார் பந்தயத்தின் மீது அவருக்குள்ள அன்பு எவ்வளவு பெரிது என்பதைக் காட்டுவதாக ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்