நடிகர் சிம்பு நடித்துப் 2012-ஆம் ஆண்டு வெளியான ‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இவர் தற்போது தமிழ் திரையுலகில் முக்கியமான மற்றும் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
2022-ஆம் ஆண்டில் நடிகை நயன்தாராவை காதலித்து திருமணம் செய்துகொண்ட விக்னேஷ் சிவன், தற்போது பிரதீப் ரங்கநாதனை நாயகனாக வைத்து ‘எல்ஐகே’ என்ற புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெற்ற கோ பூஜையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் கலந்து கொண்டார். பின்னர் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்தார். கோயில் வழிபாடு முடிந்த பின் வெளியே வந்த அவருடன் ரசிகர்கள் செல்பி எடுத்து மகிழ்ச்சியடைந்தனர்.