Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

தனது பிரமாண்டத்தை மீண்டும் நிரூபிக்க காத்திருக்கும் இயக்குனர் ஷங்கர்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! #GAME CHANGER

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக பெயர் பெற்றவர் ஷங்கர். அவரது இயக்கத்தில் வெளிவந்த எந்த படத்தையும் தோல்வி என குறிப்பிட முடியாத அளவுக்கு வெற்றிபெற்ற படங்கள் தான். ஆனால், “இந்தியன் 2” படத்தின் சர்ச்சைகள் மற்றும் தடைபட்ட படப்பிடிப்பு ஷங்கரை கடுமையாக பாதித்தது என்று கூறவேண்டும்.

ஷங்கர் தற்போது தெலுங்கில் முதன்முறையாக இயக்கி வரும் “கேம் சேஞ்சர்” படம் குறித்து, அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். இந்த நிலையில், “கேம் சேஞ்சர்” படத்தின் இரண்டாவது பாடல் “ரா ரா மச்சா” இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியானது. அது தெலுங்கில் யூ டியூபில் இரண்டு நாட்களில் 24 மில்லியன் பார்வைகளையும், ஹிந்தியில் 17 மில்லியன் பார்வைகளையும் கடந்து சென்றுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையில் வெளிவந்த “இந்தியன் 2” பாடல்களுக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் “கேம் சேஞ்சர்” படத்தின் பாடல்களுக்கு தெலுங்கிலும், ஹிந்தியிலும் கிடைத்த வரவேற்பு, ராம் சரண் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

Read more

Local News