தமிழில் கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி போன்ற எதார்த்தமான வாழ்வியல் படங்களை கொடுத்து ரசிகர்களை ஈர்த்தவர் இயக்குநர் ராம். தற்போது இவரது இயக்கத்தில் “பறந்து போ” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதில் மிர்ச்சி சிவா, அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படமானது, பிடிவாதம் நிறைந்த பள்ளி மாணவன் ஒருவன், பணத்தின் மீது ஆசை மூழ்கிய அவன் தந்தை, நகரத்தில் இருந்து வெளியேறி அவர்கள் அனுபவிக்கும் ஒரு பயணத்தை பற்றிய கதையை கொண்டுள்ளது.
இந்த, “பறந்து போ” படத்தை மனமார்ந்துப் புகழ்ந்து இயக்குநர் அட்லீ ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “இந்த படம் எனக்கு மிகவும் நெருக்கமாகத் தோன்றியது. அப்பா–மகன் உறவை அருமையாக சொல்லியுள்ளார்கள். ராம் அண்ணாவுக்கு என் வாழ்த்துகள். நிச்சயமாக இந்தப் படம் எல்லா எல்லாரையும் கவரும் எனப் பாராட்டு தெரிவித்துள்ளார்.