தனுஷ் மற்றும் கிரித்தி சனோன் இணைந்து நடித்துள்ள ‘தேரே இஷ்க் மே’ திரைப்படத்தின் ‘ஓ காதலே’ பாடலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படம், இயக்குனர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் உருவாகியுள்ளது. முன்னதாக தனுஷ் நடித்த ‘ராஞ்சனா’ மற்றும் ‘அட்ராங்கி ரே’ என்ற பாலிவுட் படங்களையும் இதே இயக்குனர் தான் இயக்கியிருந்தார்.
அந்த இரு படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றதால், இந்த கூட்டணிக்கு ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே எதிர்பார்ப்பு நிலவியது. தற்போது மீண்டும் இணைந்துள்ள இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கிரித்தி சனோன் நடித்துள்ளார்.
ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் வரவிருக்கும் நவம்பர் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

