இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷின் 51வது திரைப்படமாக ‘குபேரா’ உருவாகியுள்ளது. இந்த படத்தில் நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா, ஜிப் சார்ப், பாக்யராஜ் மற்றும் சுனைனா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் என தேவிஸ்ரீ பிரசாந்த் பணியாற்றியுள்ளார்.

படத்தின் முழு படப்பிடிப்பும் ஏற்கனவே முடிந்துவிட்டது. ஆனால், படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நேரத்தில் ராஷ்மிகா தன் காலில் அடிபட்டதனால் ஒரு பாடலுக்கான காட்சியின் படப்பிடிப்பு மட்டும் நடைப்பெறவில்லை. இப்போது அந்த பாடல் காட்சியின் படப்பிடிப்பு, தனுஷும் ராஷ்மிகாவும் கலந்து கொண்டு ஏப்ரல் 10ம் தேதி தொடங்கி நான்கு நாட்கள் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த திரைப்படம் வருகிற ஜூன் 20ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் ஒரே நாளில் வெளியாகவுள்ளது.