நடிகர் தனுஷ், இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் ‘குபேரா’ எனும் புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த ‘குபேரா’ திரைப்படம் தனுஷின் 51-வது படமாகும். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் தெலுங்குத் திரையுலகின் பிரபல நடிகரான நாகார்ஜூனாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் பணியாற்றியுள்ளார். இந்த திரைப்படம் வருகிற ஜூன் 20-ந்தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் 1ம் தேதி சென்னையில் ஸ்ரீ சாய் ராம் தனியார் கல்லூரியில் நடைபெறவுள்ளது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.