நடிகர் பிரபு மற்றும் வெற்றி இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படம் ‘ராஜபுத்திரன்’. இப்படத்தை மகா கந்தன் என்பவர் இயக்கியுள்ளார். இதில், கிருஷ்ண பிரியா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், வெற்றி, தங்கதுரை, மன்சூர் அலிகான், இமான் அண்ணாச்சி ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘ராஜபுத்திரன்’ திரைப்படத்தை கிரெசண்ட் சைன் கிரியேஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு இசையமைத்துள்ளவர் நவ்ஃபால் ராஜா மற்றும் ஒளிப்பதிவை ஆலிவர் டெனி மேற்கொண்டுள்ளார். தற்போது, இப்படத்தின் முதல் பாடலாக ‘உம்மா’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை மோகன் ராஜன் எழுதிய வரிகளுக்கு, டி. ராஜேந்தர் பாடியுள்ளார்.
இந்த பாடல் மிகுந்த உற்சாகமான மற்றும் இனிமையான வகையில் அமைந்துள்ளது. இந்த பாடலில் வெற்றி, பிரபு மற்றும் இமான் அண்ணாச்சி ஆகியோர் நடித்து இருக்கின்றனர். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.