இந்திய திரையுலகில் தற்போது கடந்த 10 ஆண்டுகளில் யார் அதிகம் இணையத்தில் தேடப்பட்டிருக்கிறார்கள் என்ற புள்ளி விவரம் வெளியாகி உள்ளது. இதில் தீபிகா படுகோன் முதல் இடத்தை பிடித்திருக்கிறார். ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய், ஆலியா பட், இர்பான்கான், அமீர்கான், சுஷாந்த் சிங் ராஜ்புத், சல்மான்கான், ஹிருத்திக் ரோஷன், அக்ஷய்குமார் முறையே அடுத்தடுத்த இடங்களை பிடித்திருக்கிறர்கள். சமந்தாவிற்கு 13வது இடமும், தமன்னாவுக்கு 16வது இடமும், நயன்தாராவிற்கு 18வது இடமும், பிரபாசுக்கு 29வது இடமும், தனுஷிற்கு 30வது இடமும் கிடைத்துள்ளது.
