‘வீர தீர சூரன்’ படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் நடிக்கும் அவரது 63வது திரைப்படத்தை இயக்குவது ‘மண்டேலா’ படத்தின் மூலம் புகழ்பெற்ற மடோன் அஸ்வின் என ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் அந்த கூட்டணி அமையவில்லை.

இதனிடையில், விக்ரமின் 63வது படத்தை யார் இயக்க போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தவந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விக்ரமின் 63வது படத்தை அறிமுக இயக்குனர் போடி கே. ராஜ்குமார் இயக்குகிறார். அவர் இதற்கு முன்பு மூன்று குறும்படங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர் என கூறப்படுகிறது. இப்படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

