Touring Talkies
100% Cinema

Sunday, August 3, 2025

Touring Talkies

கோலாகலமாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரபலம் விக்ரமன் திருமணம்… திரைப்பிரபலங்கள் வாழ்த்து!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 8வது சீசனில் வெற்றிகரமாக நடந்து வருகிறது. கடந்த சீசன் மிகுந்த விமர்சனங்களை சந்தித்த நிலையில், பிக்பாஸ் சீசன் 6 பரபரப்புக்கு தட்டுப்பாடின்றி பல திருப்பங்களை வழங்கியது. இந்த நிகழ்ச்சியில் அசீம் நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தாலும் டைட்டில் வின்னராக வெற்றி பெற்றார். அதே சமயம், ரசிகர்களின் மனதை கவர்ந்த விக்ரமன் ரன்னர் அப்பாக இடம்பிடித்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, சில ஆண்டுகளுக்கு முன்பே பிரீத்தியை சந்தித்து, நண்பர்களாக பழகி பின்னர் காதலர்களாக மாறிய அனுபவத்தை விக்ரமன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இவர்களின் திருமணம், குடும்பத்தினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களின் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

ப்ரீத்தியின் விருப்பத்தின் படி தாலி கட்டப்பட்டு, மோதிரம் மாற்றி திருமண நிகழ்வு இனிதே நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இந்த நிகழ்வில் இயக்குநர்கள் சீனு ராமசாமி, கரு பழனியப்பன் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நண்பர்கள் கலந்து கொண்டனர். வரவேற்பு நிகழ்ச்சி விரைவில் நடைபெறவுள்ளதாகவும் விக்ரமன் அறிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News