பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான அமீர் – பாவனி ரெட்டி ஜோடி, நிகழ்ச்சி முடிந்த பிறகும் தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வருகின்றனர். பிக் பாஸ் வீட்டில் காதல் மலராமல் இருப்பது அரிது, ஆனால் நிகழ்ச்சி முடிந்தவுடன் அந்தக் காதல் தொடர்ந்து நிலைக்காது என்பது பழக்கம். ஆனால், பிக் பாஸ் சீசன் 6-ல் காதலித்த அமீரும் பாவனியும், நிகழ்ச்சி முடிந்த பின்னரும் அதே அன்புடன் காதலித்து வருகின்றனர்.

பாவனி வயதில் அமீரை விட மூத்தவர், எனினும் காதலுக்கு வயது ஒரு தடையாக இருக்க முடியாது என்பதையே அவர்கள் நிரூபித்து வருகின்றனர். திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வசித்து வருவதால், அவர்களின் லிவிங் ரிலேஷன்ஷிப் பற்றியும் சமூகத்தில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இருப்பினும், அவர்கள் அந்த விமர்சனங்களை கவனிக்காமல், மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.

இவர்களின் உறவைப் பற்றிய ஒரே கேள்வி ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து எழுவது, “எப்போது கல்யாணம்?” என்பதே. இந்நிலையில், வாலண்டைன்ஸ் டே முன்னிட்டு நடிகை பாவனி ரெட்டி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமீருடன் கை கோர்த்தபடி இருக்கும் புகைப்படம் மற்றும் “coming soon” எனக் குறிப்பு உள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள், இது திருமணத்திற்கான அறிவிப்பா? அல்லது அடுத்த பட அறிவிப்பா? என ஆர்வமாக கேட்டு வருகின்றனர்.