Touring Talkies
100% Cinema

Saturday, October 4, 2025

Touring Talkies

அசோக் செல்வனின் எமக்குத் தொழில் ரொமான்ஸ் திரைப்பட ரிலீஸ் தள்ளிவைப்பு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. படக்குழு வெளியிட்ட அறிக்கையில், அன்புள்ள திரைப்பட ரசிக பெருமக்களுக்கும் திரையரங்க உரியைமாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் T.Creations தயாரிப்பில் உருவான “எமக்குத் தொழில் ரொமான்ஸ்” என்கிற திரைப்படம் 15/11/24 வெள்ளிக்கிழமை அன்று வெளியிடுவதாக அறிவித்து இருந்தோம். தற்போது உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மையத்தின் காரணமாக இன்னும் ஒரு வாரம் கனமழை பெய்யுமென வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இந்தச் சூழலில் திரைப்படத்தை வெளியிட்டால் வசூலில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்கிற அச்சத்தில் இப்படத்தின் வெளியிட்டை தள்ளிவைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தொடர் மழை நின்றதும் விரைவில் படம் வெளியிடப்படும். படம் வெளியிடும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் உங்கள் ஆதரவுக்கு நன்றி என கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News