Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

காதல் VIBE கொடுக்க காத்திருக்கும் அசோக் செல்வன்… ‘எமக்கு தொழில் ரொமான்ஸ் எப்போ ரிலீஸ் தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள படம் “எமக்குத் தொழில் ரொமான்ஸ்”. இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் பாலாஜி கேசவன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் அவந்திகா மிஸ்ரா நாயகியாக நடித்திருக்கிறார். மேலும், எம். எஸ். பாஸ்கர், ஊர்வசி, அழகம்பெருமாள், பகவதி பெருமாள், விஜய் வரதராஜ், படவா கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை திருமலை தயாரித்துள்ளார், மற்றும் இசையமைப்பாளராக நிவாஸ் கே. பிரசன்னா பணியாற்றியுள்ளார். ஒளிப்பதிவு செய்யும் பணியை கணேஷ் சந்திரா மேற்கொண்டுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இளமை நிறைந்த ஒரு காதல் கதையை மையமாகக் கொண்டு, அதனால் ஏற்படும் சிக்கல்களை, அவனுக்கு உதவும் குடும்பம் மற்றும் நண்பர்களை ஆவணமாக்கி, இந்த படம் ரொமான்ஸ்-காமெடி வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், “எமக்கு தொழில் ரொமான்ஸ்” படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 15-ந்தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News