கடந்த வருடத்தில், லோகேஷ் கனகராஜ் தனது தயாரிப்பில் இரண்டாவது படமாக ‘பென்ஸ்’ படத்தை தயாரிப்பதாக அறிவித்திருந்தார். லோகேஷ் கனகராஜ் கதையில் உருவாகும் இந்த திரைப்படத்தை ‘ரெமோ’ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கவிருக்கிறார் என்றும், இதில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்தப் படத்தின் முன் தயாரிப்பு பணிகள் முடிந்துவிட்ட நிலையில், படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளராக சாய் அபயன்கர் பணியாற்றுகிறார்.
இந்நிலையில், இப்படத்தில் நடிக்க நடிகர்கள் மாதவன் மற்றும் நிவின் பாலி இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.