இந்திய சினிமாவில் அடுத்த இரண்டு மாதங்களில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இரண்டு முக்கியமான படங்கள் தமிழில் ‘கங்குவா’ மற்றும் தெலுங்கில் ‘புஷ்பா 2’ ஆகும். இந்த இரண்டு படங்களின் வெளியீட்டுத் தேதிகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன.
‘கங்குவா’ நவம்பர் 14ஆம் தேதியும், ‘புஷ்பா 2’ டிசம்பர் 6ஆம் தேதியும் வெளியாக உள்ளது. இந்த இரண்டு படங்களையும் பான் இந்தியா அளவில் மிகப்பெரிய அளவில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையில், ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தை டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளாரகள். அதேசமயம், கடந்த சில நாட்களாக இப்படத்தை 2025 பொங்கல் பண்டிகைக்கு தான் வெளியிட திட்டமிட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளையில், ராம் சரணின் தந்தை சிரஞ்சீவி நடித்துள்ள ‘விஷ்வம்பரா’ படத்தையும் அதே நேரத்தில் வெளியிட முடிவு செய்துள்ளார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.