இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு கதாநாயகனாகவும் மற்றும் வடசென்னையில் நடித்த சில நடிகர்கள் நடிக்கும் படம் தான் அரசன். இப்படம் வடசென்னை காலகட்டத்துடன் தொடர்புடைய கதையாக உருவாகிறது.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் ப்ரோமோ அனிருத் பிறந்த நாளான அக். 16 ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இப்படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க பிரபல கன்னட நடிகர்களான உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப்பிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல நடிகர்கள் இப்படத்தில் இணையவுள்ளதாக கூறப்படும் நிலையில் அரசன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.