நடிகர் மாதவன் தற்போது தமிழில் டெஸ்ட் என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இரு ஆண்டுகளுக்கு முன்பு, விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவான ராக்கெட்டரி என்ற திரைப்படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதோடு, அந்த படத்தை இயக்கியதும் குறிப்பிடத்தக்கது.
இப்போது, மீண்டும் விஞ்ஞானியின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட மற்றொரு படத்தில் மாதவன் நடிக்கிறார். இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் மோட்டாரை உருவாக்கியவர் மற்றும் “இந்தியாவின் எடிசன்” என அழைக்கப்பட்ட ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு இப்படத்தை இயக்கி நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்த சூழலில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே தமிழில் சூரரைப்போற்று மற்றும் ராயன் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.