தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அருண் விஜய், தற்போது கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் ‘ரெட்ட தல’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அவர் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். தான்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி உள்ளிட்டோரும் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.
அருண் விஜய் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருப்பதால், ரெட்ட தல பல திருப்பங்களுடன் கூடிய கதையாக உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்த நிலையில், இதன் வெளியீட்டு தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ரெட்ட தல படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. கண்ணம்மா என்ற அந்த பாடலை தனுஷ் பாடியுள்ளார். இப்பாடல் வரும் 19ஆம் தேதி வெளியாக உள்ளது.