புஷ்பா 2 படத்தை அடுத்து அட்லி இயக்கும் படத்தில் நடிப்பதற்கு தயாராகிக் வருகிறார் அல்லு அர்ஜுன். சயின்ஸ் பிக்ஷன் கதையில் உருவாகும் இந்த படம் மறுபிறவி கதையில் உருவாகிறது. இப்படத்தில் அல்லு அர்ஜுன் மூன்று வேடங்களில் நடிக்கப் போகிறார். இந்த படம் சம்பந்தப்பட்ட ஆரம்ப கட்ட பணிகளை மும்பையில் தொடங்கி இருக்கிறார் இயக்குனர் அட்லி. அதன் காரணமாகவே தற்போது அல்லு அர்ஜுனும் மும்பையில் முகாமிட்டுகிறார்.இந்த நேரத்தில் பாலிவுட் நடிகர் அமீர் கானை நேற்று மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார் அல்லு அர்ஜுன்.
