நடிகர் சிம்பு குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி நட்சத்திர நாயகனாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். சிம்பு என்றால் சில விமர்சனங்களும் எழுவது உண்டு.
சினிமாவில் எழுந்த விமர்சனம் பற்றி பேட்டி ஒன்றில் நீங்கள் ’தல’ ரசிகன் என்று பெரும்பாலான படங்களில் கூறுவதுண்டு உண்மையில் நீங்கள் அஜித் ரசிகரா..? சினிமாவை தாண்டி என் சொந்த வாழ்க்கையில் விஜய் அண்ணாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்.
படமாக பார்க்கும் போது அஜித் சாரை எனக்கு ரொம்ப பிடிக்கும். சினிமாவில் தான் இந்த விமர்சனம் எல்லாம். நான் எப்போதும் வெளிப்படையாக பேசுபவன் அதை விஜய் அண்ணா எப்போதும் தப்பா எடுத்துக் கொண்டதே கிடையாது.என் தனிப்பட்ட விஷயம் வேறு சினிமா வேறு என்றார் சிம்பு.