Saturday, February 1, 2025

விடாமுயற்சி படப்பிடிப்பில் கார் விபத்து ஏற்பட்டபோது அஜித் சார் என்னிடம் மன்னிப்பு கேட்டார்…. நெகிழச்சியுடன் பகிர்ந்த நடிகர் ஆரவ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விடாமுயற்சி படத்தில் நடித்து முடித்திருக்கிறார் அஜித்குமார். மேலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் நடித்திருக்கிறார். இவற்றில் விடாமுயற்சி படம் பிப்ரவரி ஆறாம் தேதியும், குட் பேட் அக்லி ஏப்ரல் 10ஆம் தேதியும் ரிலீஸாகவிருக்கின்றன. இந்தச் சூழலில் அஜித் குறித்து ஆரவ் பேசியிருப்பது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கில் நடந்த விபத்து குறித்து ஆரவ் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “அந்த ஆக்ஸிடெண்ட் ஏற்பட்டதும் என்னிடம் அஜித், நீ சென்று மருத்துவமனையில் எக்ஸ் ரே எடுக்க வேண்டும் என்றார். ஆனால் ஷூட்டிங்கை முடித்துவிட்டு எக்ஸ் ரே எடுத்துக்கொள்ளலாம் என்று நான் நினைத்தேன்.

இதனையடுத்து ஷூட்டிங் முடிந்ததும் அவருடன் காரில் என்னை ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து சென்றார். அவரே மருத்துவரிடம் அனைத்து விவரங்களையும் சொல்லி என்னை சோதித்து பார்க்க சொன்னார். அதுவரை அவர் வெளியில் காத்திருந்தார். மருத்துவர்கள் சோதித்துவிட்டு எதுவும் பெரிதாக இல்லை என்று சொன்ன பிறகு அஜித் என்னிடம் வந்து தன்னை மன்னித்துக்கொள்ளும்படி கேட்டார். எப்போதும் இது மாதிரி நடக்காது. என்னால் உனக்கு இப்படி ஆகிவிட்டதே என்று நினைக்கும்போது எனக்கு ரொம்பவே வருத்தம் என்றும் சொன்னார். அந்த தருணத்தில் நான் நெகிழ்ச்சியுடன் உணர்ந்தேன் என்றுள்ளார்.

- Advertisement -

Read more

Local News