அஜித் நடிப்பில் இந்த ஆண்டின் பிப்ரவரி மாதம் ‘விடாமுயற்சி’ திரைப்படம் வெளியாகி, அதற்குப் பிறகு இதுவரை இல்லாத வகையில் ஒரே வருடத்தில் ‘குட் பேட் அக்லி’ என்ற படம் இம்மாதம் வெளியானது. இதில் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வசூல் ரீதியாக ஓரளவு வெற்றி பெற்று, இன்னும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதே சமயம், அஜித் தனது வழக்கமான கார் ரேஸ் பயணங்களில் தொடர்ந்து ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார்.

இவற்றைத் தவிர, பொதுவாக நிகழ்வுகளில் பெரிதாக கலந்து கொள்ளாத அஜித், நேற்று திடீரென சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியை தனது குடும்பத்துடன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வைரலாகி வருகின்றன.
நேற்றுமுன்தினம் அஜித் மற்றும் ஷாலினியின் 25வது திருமண நாளாக இருந்தது என்பதால், இந்த கொண்டாட்டத்தினால் உற்சாகமாக தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து கிரிக்கெட் போட்டியை நேரில் சென்று ரசித்தார் என்று தெரிகிறது. இதே போட்டியை நேரில் பார்வையிட்ட சிவகார்த்திகேயன், அஜித்தை சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்ததுடன், அஜித்துடன் சேர்ந்து கிரிக்கெட் போட்டியை ரசித்தார்.