Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

அடி வாங்கிய அஜித்:’ பயந்த வைபவ் மங்காத்தா மாஸ்..!வெங்கட் பிரபு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வெங்கட் பிரபு இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் மங்காத்தா. அந்த படத்தில் அர்ஜூன், த்ரிஷா,வைபவ் ,அஞ்சலி,லக்ஷ்மி ராய்,பிரேம்ஜி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

படத்தின் அனுபவம் பற்றி இயக்குனர் வெங்கட் பிரபு பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டார்.

வைபவ் ஒரு சீனில் அஜித்தை அடிக்க வேண்டும்.ஆனால் அவர் உங்களை அடிப்பது போல் சீன் எடுத்தால் எனது வாழ்க்கையே போய்விடும் என்று பயந்து அடிக்க மறுத்து விட்டார்.

ஆனால் அஜித் இந்த கதாபாத்திரம் உனக்கானது நீ என்னை அடித்தால் தான் நன்றாக வரும் அதனால் தயங்காமல் அடி என்றார்.

எதுவும் நடக்காது நான் பார்த்துக் கொள்கிறேன் என்று இரண்டு முறை தனது கன்னத்தை காட்டினார் அஜித்.

அந்த சீன் எப்படி எடுக்கப்பட்டது என்று இயக்குனர் வெங்கட் பிரபு கூறினார்.

- Advertisement -

Read more

Local News