சமீபத்தில், தொலைக்காட்சி நடிகை ஸ்ருதி நாராயணின் தனிப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகியது. இந்த சூழலில், நடிகை சனம் ஷெட்டி தனது கோபத்தையும் வருத்தத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

தனது வீடியோவில், அவர் கூறியதாவது: “ஸ்ருதி நாராயணின் வீடியோ இணையத்தில் பரவிவருகிறது. உங்களிடம் அந்த வீடியோ இருந்தால் உடனே அதை நீக்குங்கள். இது சாதாரண விஷயம் அல்ல, ஒரு வியாபாரமாக மாற்றப்பட்டுள்ள சூழ்நிலை. ‘காஸ்டிங் கவுச்’ என்ற பெயரில் திட்டமிட்ட ஒரு செயலாக இது நடைபெறுகிறது. ஆடிஷன் என்ற பெயரில் எந்த விஷயத்தையும் கேட்க முடியுமா? இந்த வழியில் பல பெண்களின் சாபத்தை சம்பாதித்து ஒரு படத்தை எடுத்தால், நீங்கள் வெற்றி பெறுவீர்களா?
ஸ்ருதி, அந்த வீடியோ போலியானது என்கிறார். அது உண்மையென்றால், அவர் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரபலங்களின் வாரிசுகளும், இப்படியான ‘காஸ்டிங் கவுச்’ முறைகளும் காரணமாக என்னைப் போன்ற பல நடிகைகளுக்கு இன்று சினிமாவில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டுவிட்டன. சினிமாவில் உள்ள முக்கியமானவர்களே, உங்கள் துறையே நாசமாகியுள்ளது. முதலில் அதை சுத்தம் செய்யுங்கள். நடிகைகளுக்கு பாதுகாப்பு, மரியாதை, மற்றும் நியாயமான பட வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்” என அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.