“இருட்டு அறையில் முரட்டு குத்து”, “ஸோம்பி”, “கவலை வேண்டாம்” போன்ற பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்தவர் யாஷிகா ஆனந்த். சமீபத்தில் ஒரு விபத்தில் சிக்கிய அவர், ஆறு மாதங்கள் நீண்ட சிகிச்சை பெற்ற பின் முழுமையாக குணமடைந்து மீண்டும் நடிப்பதில் பிஸியாகியுள்ளார்.

இவர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அதேசமயம் சமூக வலைத்தளங்களில் அவர் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இப்போது அவர் அணிந்துள்ள ஜொலிக்கும் நவீன உடையுடன் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் பரவலாக வைரலாகி வருகின்றன.