நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான் வரலட்சுமி சரத்குமார், 2012-ஆம் ஆண்டு வெளியான ‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் கதாநாயகியாக அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து, தாரை தப்பட்டை, சண்டக்கோழி 2, சர்க்கார் போன்ற பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.

வரலட்சுமி, தமிழ் மட்டும் இல்லாமல், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில், மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தற்போது, தனது கணவர் நிக்கோலாய் சச்தேவ் அவருக்கு பிங்க் நிறம் கொண்ட போர்ஷே வகை காரை பரிசளித்துள்ளார். இது தொடர்பான வீடியோவையும் வரலட்சுமி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், இந்த காருக்கு ‘பார்பி’ என்று பெயர் வைக்க உள்ளதாக கூறியுள்ளார்.