இந்திய திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகையான ஸ்ரீ லீலா, முதலில் கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். அதன் பின்னர், தெலுங்கு திரையுலகில் மகேஷ் பாபு, ரவி தேஜா, ராம் பொத்தினேனி, நிதின், பாலகிருஷ்ணா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து, தற்போது பிஸியான நடிகையாக பணியாற்றி வருகிறார்.

சமீபத்தில், இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘பராசக்தி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தனது அறிமுகத்தை பதிவு செய்தார். தற்போது, தமிழுக்கு அடுத்ததாக பாலிவுட்டிலும் தனது பயணத்தை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கேற்ப, பிரபல இயக்குனர் அனுராக் பாசு இயக்கத்தில் உருவாகும் புதிய ஹிந்தி திரைப்படத்தில், ஸ்ரீ லீலா, நடிகர் கார்த்திக் ஆர்யனுடன் இணைந்து கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இப்படத்தை டி-சீரியஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இத்திரைப்படம் இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.