மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி,அரவிந்த் சாமி,மம்முட்டி, ஸ்ரீவித்யா, ஷோபனா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தளபதி.இந்த படம் பற்றி ரஜினிகாந்த் ஒரு நிகழ்ச்சியின் போது
தளபதி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது நான் வாக்கிங் ஷு போட்டு ஷூட்டிங் போய் விட்டேன். மணி சார் என்னை காஸ்டியும் மாற்றிக் கொள்ளலாம் என்றார். நான் சொன்னேன் இது தான் சார் காஸ்டியும் என்றேன்.
என்னை மேலே கீழே பார்த்துட்டு போயிட்டார். ஷோபானாவுக்கு எனக்கும் எடுக்க வேண்டிய சீன் எல்லோரும் பேசிட்டு இருக்காங்கா… ஷாட் ரெடினு யாரும் சொல்லல. ஷோபனா ரொம்ப கிண்டல் பண்ணுவாங்க… பக்கத்திலே வந்து என்ன பேசுறாங்க தெரியுமா உங்களை தூக்கிட்டு இந்த படத்தில் கமல் சாரை போடப் போறாங்களாம் சொல்லுது ஷோபனா. ஆனா அவங்க பேசியது என் ஷு பத்தி..
அந்த மாதிரி ஆளு ஷோபனா… தளபதி படத்தில் நடந்த சம்பவம் பற்றி பகிர்ந்து கொண்டார் ரஜினி