சமீபகாலமாக மலையாள சினிமாவில் சில நடிகைகள் கதை மற்றும் திரைக்கதை எழுதி தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.

அந்தவகையில்‘ஒரு அடார் லவ்’ படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்த நூரின் ஷெரீப் தற்போது நடிகர் திலீப் நடித்து வரும் ‘பா பா பா’ படத்திற்குக் கதை எழுதியுள்ளார். அதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘லோகா சாப்டர் 1 : சந்திரா’ படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார் நடிகை சாந்தி பாலச்சந்திரன்.
இந்தப்படத்தின் மூலம் திரைக்கதை ஆசிரியராக அறிமுகமானார் சாந்தி பாலச்சந்திரன். கடந்த 2017ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் மலையாளத்தில் தயாரித்த ‘தரங்கம்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் இவரே. அந்தப் படத்தின் இயக்குனர் டொமினிக் அருண் தான் தற்போது ‘லோகா சாப்டர் 1 : சந்திரா’ படத்தையும் இயக்கியுள்ளார். சாந்தியின் கதை உருவாக்கும் திறமையை அறிந்த அவர், இந்த படத்தில் திரைக்கதை எழுத உற்சாகப்படுத்தியதாக கூறப்படுகிறது. தற்போது லோகா திரைப்படத்தின் வெற்றி சாந்தி பாலச்சந்திரனை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.