தமிழ் சினிமாவில் ‘இறுதிசுற்று’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை ரித்திகா சிங், அதன் பின்னர் ‘ஆண்டவன் கட்டளை’, ‘சிவலிங்கா’, ‘மழை பிடிக்காத மனிதன்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும், தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘வேட்டையன்’ திரைப்படத்திலும் அவர் நடித்திருந்தார்.

தெலுங்கில் வெளியான ‘இறுதிசுற்று’ திரைப்படத்தின் ரீமேக்கிலும் ரித்திகா சிங் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் தற்போது சில படங்களில் கமிட்டாகி உள்ளார்.
இந்நிலையில், ரித்திகா சிங் மிகுந்த கவர்ச்சியாக மார்டன் உடையில் புகைப்படக் காட்சிகளை எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.