கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்த ‘தம்மா’ என்ற ஹிந்தி திரைப்படம் வெளியானது. அந்தப்படத்திற்குப் பிறகு, தற்போது அவர் கைவசம் ‘தி கேர்ள் பிரண்ட்’, ‘மைசா’ என்ற இரண்டு தெலுங்கு படங்களும், ‘ஹாக்டெய்ல் 2’ என்ற ஹிந்தி படமும் உள்ளன.

இதில் ‘தி கேர்ள் பிரண்ட்’ திரைப்படம் வருகிற நவம்பர் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தை ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ளார். இப்படத்தின் கதை தன்னை மிகவும் ஆழமாக இம்ப்ரஸ் செய்துவிட்டதாக ராஷ்மிகா தெரிவித்துள்ளார். அதனால், இப்படியொரு அர்த்தமுள்ள கதையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது தன்னுக்கு பெருமையாக இருந்ததாக கூறியுள்ளாராம்.
மேலும், இந்தப் படத்தில் ஒரு பைசாவும் சம்பளமாக வாங்காமல் ராஷ்மிகா நடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம், இப்படம் வெளியான பின் அவருக்கான சம்பளத்தை வற்புறுத்தியாவது வழங்குவோம் என்று தயாரிப்பாளர்கள் உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.

