தமிழில் கமல்ஹாசனின் ‘உத்தமவில்லன்’, அஜித் குமாரின் ‘என்னை அறிந்தால்’, விஜய்யின் ‘தி கோட்’ போன்ற படங்களில் நடித்தவர் பார்வதி நாயர். இவரது நடிப்பில் மலையாள மொழியிலும் பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
பார்வதி நாயரும், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக் என்பவரும் காதலித்து வந்தனர். அவர்களின் காதலை இரு குடும்பத்தினரும் ஒப்புக் கொண்டதன் பின்னர், திருமணத்திற்கான ஏற்பாடுகள் தொடங்கின. கடந்த சில நாட்களுக்கு முன்னர், இவர்களின் நிச்சயதார்த்தம் நிகழ்ந்தது. அதன் பின்னர் ஒரு வாரத்திற்கு மேல் மெஹந்தி, ஹல்தி, சங்கீத் உள்ளிட்ட திருமண விழா தொடர்பான பலவிதமான நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இன்று (பிப்ரவரி 10) பார்வதி நாயரும் ஆஷ்ரித் அசோக்கும் சென்னை திருவான்மியூரில் திருமணத்தில் இணைந்தனர். திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, புதுமணத் தம்பதியினரை வாழ்த்தினர். இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியவுடன், திரைப்பிரபலங்களின் ரசிகர்களும், பொதுமக்களும் சமூக ஊடகங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.