தற்போது தனது பெயரில் நியூமராலஜிபடி ஒரு எழுத்தை கூடுதலாக இணைத்துள்ளார் மீனாட்சி சவுத்ரி. அதாவது இன்ஸ்டாகிராமில் மீனாட்சி சவுத்ரி என்பதில், ‛என்’ -என்ற எழுத்துக்குப் பிறகு ஒரு ‛ஏ’ எழுத்தை மட்டுமே எழுதி வந்த மீனாட்சி சவுத்ரி, தற்போது இரண்டு ‛ஏ’ எழுத்துக்களை இணைத்து இருக்கிறார். இது குறித்து சில ரசிகர்கள் அவரிடத்தில் கேள்வி கேட்டபோது, நியூமராலஜிபடி இந்த திருத்தத்தை செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறார் மீனாட்சி சவுத்ரி.
