90களில் இந்திய அளவில் பிரபலமான நடிகை மனிஷா கொய்ராலா, தமிழில் பம்பாய் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து இந்தியன், முதல்வன், ஆளவந்தான், பாபா, மும்பை எக்ஸ்பிரஸ் போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

நேபாளத்தை சேர்ந்த இவர், தற்போது பாலிவுட் படங்களிலும், ஓடிடி தளங்களுக்கான வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். நேற்றைய தினம் தனது சமூக வலைதளத்தில் “கருப்பு நாள்” என்று பதிவு செய்துள்ளார். காரணம், நேபாள அரசு திடீரென பேஸ்புக், யூடியூப், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு தடை விதித்தது.
இதனை எதிர்த்து நடைபெற்ற வன்முறையில் 22 பேர் உயிரிழந்ததோடு, 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். போராட்டம் அதிகரித்ததை அடுத்து, அரசு தடை உத்தரவை வாபஸ் பெற்றது. உயிரிழப்புகளையும், அரசின் அடக்குமுறையையும் கண்டிக்கும் வகையில் மனிஷா கொய்ராலா இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.