இன்ஸ்டாகிராம் தளத்தில் ஃபோட்டோ ஷூட் நடத்தி ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் மாளவிகா மோகனன். அதிலும் குறிப்பாக கிளாமரான புகைப்படங்களை இடையிடையே பகிர்ந்து ரசிகர்களிடமிருந்து பெருமளவிலான லைக்குகளைப் பெற்றுவருகிறார்.


தற்போது அவர் மலையாளத்தில் தயாராகி வரும் ‘ஹிருதயபூர்வம்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக தேக்கடியில் தங்கியிருந்த அனுபவத்தை ஒரு நீண்ட பதிவாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். படப்பிடிப்பு வேலைகள் இல்லாத நேரங்களில், இப்படிப்பட்ட இயற்கை வளமிக்க இடத்தில் அமைதியான ஒரு சிறிய வீட்டில் தங்கி வாழ வேண்டும் என்பதே தனது கனவு எனவும் அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பதிவுடன் இணைத்து, மாளவிகா லுங்கி கட்டிக்கொண்டு எடுத்த சில புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். கேரளத்தில் சில பெண்கள் லுங்கி பயன்படுத்துவதுண்டு. ஆனால், இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்கள் இதனை பயன்படுத்துவதில்லை; வயதான பெண்களே இதனை அணிந்து வருகின்றனர். இருப்பினும், மாளவிகா லுங்கி அணிந்து எடுத்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.