தென்னிந்திய திரை உலகில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு முக்கியமான ஹீரோயினாக இருந்தவர் காம்னா.

திரை உலகில் முன்னணி கதாநாயகிகள் பலர் திருமணத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து விலகி விடுகிறார்கள். அந்த வகையில், சினிமா நடிப்பில் இருந்து ஓய்வு எடுத்து இருந்த காம்னா பத்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு படத்தின் மூலம் திரைத்துறைக்கு திரும்பியுள்ளார்.
தெலுங்கில் உருவாகும் “கேராம்ப்” படத்தில் காம்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வரவிருக்கும் 18-ஆம் தேதி இந்த படம் திரைக்கு வர இருக்கிறது. ஜெயம்ரவியுடன் “இதய திருடன்”, ஜீவனுடன் “மச்சக்காரன்” மற்றும் “ராஜாதி ராஜா”, “காசேதான் கடவுளடா” போன்ற தமிழ் படங்களில் காம்னா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.