இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் அவரது சகோதரர் எல்வின் நடிக்கும் திரைப்படம் ‘புல்லட்’. த்ரில்லர் கதைக்களத்தில் தயாராகும் இப்படத்தில் டிஸ்கோ சாந்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு, டிஸ்கோ சாந்தி மீண்டும் நடிக்க வருவது கவனிக்கதக்கது. படத்தில் அவர் ஒரு சூனியக்காரியாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. வைஷாலி ராஜ், சுனில், அரவிந்த் ஆகாஷ், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றார்கள்.
