Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

த்ரில்லர் படத்தில் ஆசிரியராக அசத்த வரும் நடிகை பூமிகா… எதிர்பார்ப்பை கிளப்பும் ‘ஸ்கூல்’ திரைப்படம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘பிரதர்’ படத்திற்குப் பிறகு பூமிகா நடிக்கும் புதிய தமிழ் திரைப்படம் ‘ஸ்கூல்’. இதில் அவருடன் யோகி பாபு, கே. எஸ். ரவிகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் நிழல்கள்ரவி, பக்ஸ், சாம்ஸ், பிரியங்கா வெங்கடேஷ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை, வைத்தீஸ்வரன் படத்தை இயக்கிய ஆர். கே. வித்யாதரன் இயக்கியுள்ளார். இசையமைப்பாளராக இளையராஜா பணியாற்றுகிறார்.

படம் குறித்து இயக்குநர் வித்யாதரன் கூறுகையில், “இது ஒரு உளவியல் ரீதியான திரில்லர் படம். சமுதாயத்தில் இன்று பள்ளி மாணவ, மாணவிகளின் பார்வையில் நடைபெறும் கொலைகள், தற்கொலைகள், விபத்துகள், கலவரங்கள் போன்ற முக்கிய கிரைம் சம்பவங்களை ஆராய்ந்து, அதற்கு தகுந்த விறுவிறுப்பான திரைக்கதை அமைத்துள்ளோம்.

அதே நேரத்தில், மனித உயிரின் பயணம் மற்றும் ஆவிகள், பிசாசுகள் பற்றிய நம்பிக்கைகளை மிக தீவிரமாக பேசும் கதையாக உருவாக்கியுள்ளோம். மாணவ, மாணவிகளை உளவியல் ரீதியில் ஆராய்ச்சி செய்யும் ஆசிரியர் கதாபாத்திரத்தில் பூமிகா நடிக்க, மாணவர்களை நல்வழிப்படுத்த எளிமையாக பழகும் ஆசிரியராக யோகி பாபு நடித்துள்ளார். மேலும், பள்ளியில் நடைபெறும் கிரைம் சம்பவங்களை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக கே. எஸ். ரவிகுமார் நடித்துள்ளார், என்றார்.

- Advertisement -

Read more

Local News