நடிகை ஐஸ்வர்ய லட்சுமி நிஜத்தில் ஒரு டாக்டர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் மாமன் படத்தில் டாக்ராகவே நடித்தார். அந்த கேரக்டர் பேசப்பட்டது. படம் ஹிட்டானது. இந்நிலையில், இன்று வெளியான தக் லைப் படத்திலும் அவர் டாக்டராக சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

தக் லைஃப் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி சிம்புவுக்கு தங்கையாக வருகிறார். அவருக்கும் கமல்ஹாசனுக்குமான காட்சிகளும், அவருக்கும் சிம்புவுக்குமான காட்சிகளும் சிறப்பாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
எமோஷனாலான காட்சியில் சிறப்பாக நடித்து இருக்கிறார் ஐஸ்வர்யலட்சுமி என்றும் இப்படத்தின் கதையும் அவரிடம் ஆரம்பித்து அவரிடமே முடிகிறது என்று சொல்லப்படுகிறது.