10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் திரைப்படங்களில் அறிமுகமானவர் நடிகர் விவேக் பிரசன்னா. இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்ட இவர், பெரும்பாலும் குணசித்ர வேடங்களிலும், சில நேரங்களில் காமெடி பாத்திரங்களிலும் வெற்றிகரமாக நடித்துள்ளார். தற்போது, அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படம் ட்ராமா. இப்படத்திற்கு இசையமைக்கிறார் ஆர். எஸ். ராஜ்பரத், மற்றும் ஒளிப்பதிவை கவனிக்கிறார் அஜித் சீனிவாசன்.
இப்படத்தை டர்ம் புரொடக்ஷன் ஹவுஸ் என்ற நிறுவனம் சார்பில் எஸ். உமா மகேஸ்வரி தயாரிக்கிறார். இயக்குநராக பணிபுரிகிறார் தம்பிதுரை மாரியப்பன்.
விவேக் பிரசன்னாவுடன் இணைந்து பூர்ணிமா ரவி, ஆனந்த் நாக், மற்றும் சாந்தினி தமிழரசன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் மெடிக்கல் கிரைம் திரில்லர் வகையில் தயாராகி வருகிறது, மேலும் ரசிகர்களிடம் நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டார்.