நடிகர்கள் பிரபு தேவா, வடிவேலு இணைந்து நடித்துள்ள புதிய படத்தின் விடியோ தற்போது வைரலாகி வருகிறது.
வடிவேலு மற்றும் பிரபு தேவா இணைந்து நடிக்கும் இந்தப் படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. இப்படத்தை சாம் ரோட்ரிக்ஸ் இயக்குகிறார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படம் சோம்பி (Zombie) கதைக்களத்தில் உருவாகி வருகிறது.
இந்நிலையில், வடிவேலுவுடன் காரில் பயணம் செய்துகொண்டிருக்கும் போது அவர் பாடிய பாடலைக் கேட்டு மகிழும் காட்சியைக் கொண்ட விடியோவை பிரபு தேவா தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.