ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், முன்னணி நடிகர் சூர்யா நடித்து வரும் திரைப்படம் ‘கருப்பு’. இத்திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி, நட்டி நட்ராஜ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
தற்போது, சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு, ‘கருப்பு’ படத்தின் டீசர் நாளை வெளியிடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, படக்குழுவால் தற்போது பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது.