இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம் மே 1ம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில், அதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் சூர்யா பங்கேற்று வருகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற ‘ரெட்ரோ’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூர்யா, ‘ரெட்ரோ’ திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கக்கூடிய கதை கொண்டதாக உருவாகியுள்ளது என்று கூறியுள்ளார். மேலும், தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நடித்து வரும் தனது 45வது படத்தை முடித்ததும், வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
மேலும், ஹைதராபாத்தில் மே மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் கூறிய சூர்யா, ‘ரெட்ரோ’ படம் திரையிடப்படும் மே 1ம் தேதியே நானி நடித்துள்ள ‘ஹிட்-3’ படமும் திரைக்கு வருவதால், அந்த படத்திற்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். சூர்யாவின் இந்த அறிவிப்பின் மூலம், வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படம் மீண்டும் தள்ளிப் போகும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.