Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

மருத்துவ சிகிச்சைகாக அமெரிக்கா செல்லும் நடிகர் சிவராஜ் குமார்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக உள்ள சிவராஜ்குமார், தமிழில் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து அவர் தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்திலும் நடித்தார். இந்த படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் சிவராஜ்குமார் பிரபலமானார். இந்நிலையில் சிவராஜ்குமாருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும், அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சிவராஜ்குமார் நடித்துள்ள ‘பைரதி ரணகல்’ என்ற கன்னட திரைப்படம் வரும் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்போது, இந்த படத்தின் புரமோஷன் நிகழ்வுகளில் சிவராஜ்குமார் பங்கேற்று வருகிறார். இதுதொடர்பான ஒரு நேர்காணலில் அவர் தனது உடல்நிலை குறித்து கூறியதாவது,நானும் ஒரு சாதாரண மனிதன்தான். எனக்கும் உடல் நலப் பிரச்னைகள் உண்டு. அதற்காக சிகிச்சை பெற்று வருகிறேன். இரண்டு சிகிச்சை அமர்வுகள் முடிந்துவிட்டன; இன்னும் சில சிகிச்சை அமர்வுகள் உள்ளன. அவற்றை முடித்த பிறகு, அடுத்த கட்டமாக இந்தியாவிலோ அல்லது அமெரிக்காவிலோ அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டிருக்கிறேன். அதன் பின்னர் ஒரு மாதம் ஓய்வு எடுத்துக்கொண்டு திரையுலகுக்கு மீண்டும் திரும்புவேன்.

“எனக்குள்ள உடல்நலப் பிரச்னையை முதலில் அறிந்த போது மிகவும் பதற்றமாக இருந்தது. ஆனால் அதற்காக வெளியில் மக்களை பதற்றப்படுத்த வேண்டும் என்று நினைக்கவில்லை. இதனை எதிர்கொள்வதற்கான மனப்பக்குவத்தை அடைந்தேன். இப்போது எனது உடல்நிலை நன்றாக உள்ளது, கவலைப்பட வேண்டியதில்லை,” என்று அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News