நடிகர் ஷாருக்கான் வெளியிட்டுள்ள சமீபத்திய பதிவில், என் பிறந்தநாளன்று வெளியே வந்து நின்று உங்கள் அனைவரையும் பார்க்க முடியாது என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன். காரணம், பாதுகாப்பு அதிகாரிகள் என்னிடம் இந்த அறிவுறுத்தலை வழங்கியிருக்கின்றனர். இதற்காக உங்களிடம் ஆழ்ந்த வருத்தத்ததுடன் மன்னிப்பையும் கேட்டுக்கொள்கிறேன். கூட்ட நெரிசல் ஏற்படலாம் என்பதைக் கருதி நம் ஒவ்வொருவரின் பாதுகாப்பு கருதியே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது. இதனை புரிந்துகொண்டு என் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி என கூறியுள்ளார்.


