ஐதராபாத்தில் நடந்த ‘டியூட்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் ஹீரோ பிரதீப் ரங்கநாதனை பத்திரிக்கையாளர் ஒருவர் நீங்கள் ஹீரோ மெட்டீரியலே கிடையாது, உங்களுக்கு அந்த தோற்றமே இல்லையே என விமர்சித்திருக்கிறார்.

அதைக் கேட்ட பிரதீப் கூலாக, படம் பார்க்கும் ரசிகர்கள் என்னுடன் கனெக்ட் செய்து கொள்கிறார்கள். நான் சாதாரண மனிதனாகவே என் படத்தில் இருப்பதுதான் அதற்குக் காரணம் என்று பொறுமையாக பதிலளித்துள்ளார்.
இயக்குனராக ‘கோமாளி’ என்ற வெற்றிப் படத்தையும், இயக்குனர் மற்றும் கதாநாயகனாக ‘லவ் டுடே’ வெற்றிப் படத்தையும், நடிகராக ‘டிராகன்’ என்ற வெற்றிப் படத்தையும் என அடுத்தடுத்து வெற்றிகளைக் கொடுத்துள்ளவர் பிரதீப் ரங்கநாதனை பார்த்து ஒரு பத்திரிகையாளர் கேட்ட கேள்வி சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.