நடன இயக்குனரும், நடிகருமான பிரபுதேவா தமிழ்த் திரைப்படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். தற்போது அவர் முதல்முறையாக ஓர் இணையத் தொடரில் (வெப் சீரிஸ்) நடித்துள்ளார். இந்த இணையத் தொடரை ரத்தச்சாட்சி திரைப்பட இயக்குனர் ரபிக் இஸ்மாயில் இயக்கியுள்ளார். ‘ரியாட்’ என்கிற தலைப்பில் உருவாகியுள்ள இந்த இணையத் தொடரின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றுள்ளது.

இத்தொடரில் லிங்கா, பவில் நவகீதன், அருவி மதன், ஜெமினி மணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த இணையத் தொடரை ராஜ் கமல் நிறுவனத்தைச் சேர்ந்த மகேந்திரன் தயாரித்துள்ளார்.
அடுத்த ஆண்டு இந்த இணையத் தொடர் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.