மறைந்த நடிகர் மனோஜ் பாரதிராஜா, தாஜ்மஹால் படத்துக்குப் பிறகு சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், ஈரநிலம் நிறைய படங்களில் நடித்தார். அதன், பின் இவருக்கு பட வாய்ப்பு இல்லாததால், சினிமாவில் இவரை பார்க்க முடியாமல் போனது. இந்த கால கட்டத்தில் தான் ஷங்கர் இயக்கத்தில் உருவான எந்திரன் திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார். அதோடு மட்டுமில்லாமல், அந்த படத்தில், ரோபோக்கு ரஜினிக்கு டூப் போட்டது மனோஜ் தான் என்ற தகவலும் படப்பிடிப்பு புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
